வெள்ளத்தில் மூழ்கிய நீதிமன்ற வளாகம் ; கைவரிசையை காட்டிய இளைஞர்கள்
கண்டி நீதிமன்ற வளாகம் சமீபத்தில் வெள்ளத்தில் மூழ்கியபோது, திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் இரண்டு உயர் சக்தி மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிசார் தெரிவித்தனர்.
திருட்டு நடந்த நேரத்தில் மோட்டார் சைக்கிள்கள் வழக்கு ஆதாரமாக வைக்கப்பட்டிருந்தன.

வெள்ளத்தில் மூழ்கிய நீதிமன்றம்
2025 நவம்பர் 27 அன்று கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்ட பின்னர் கண்டி நீதிமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கியபோது இந்த திருட்டு நடந்துள்ளது.
சந்தேக நபர்கள் நீதிமன்ற வளாகத்தின் பின்புறப் பகுதியிலிருந்து 1000 சிசி எஞ்சின் மற்றும் 600 சிசி எஞ்சின் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்றதாக கண்டி பொலிசார் தெரிவித்தனர்.
திருட்டு தொடர்பாக கண்டி நீதிமன்ற பதிவாளரால் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கண்டி, கெட்டம்பே கிரிபத்கும்புர மற்றும் மாவனெல்ல பகுதிகளில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.