சற்றுமுன் வெளியான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள்
2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (க.பொ.த சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சை கடந்த 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.

இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண் மற்றும் தேவையான தகவல்களைப் பயன்படுத்தி இணையதளத்தின் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.