பொலிஸ் காணிக்குள் தோட்டாக்கள் மீட்பு ; மோப்ப நாயுடன் விசேட தேடுதல்!
திருகோணமலை தம்பலகாமம் பழைய பொலிஸ் நிலைய காணிக்குள் அண்மையில் ஒரு தொகை தோட்டாக்கள் (40 வரை) காணியை சுத்தம் செய்யும்போது போது மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இதனை தம்பலகாமம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் உடனடியாக மீட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இன்று (19) குறித்த காணிக்குள் விசேட அதிரடிப் படையினர் பொலிசார் இணைந்து இன்னும் இது தொடர்பான ஆயுதப் பொருட்கள் தவறவிடப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த பழைய பொலிஸ் நிலையத்தை விட்டு புதிய கட்டிடத்துக்கு இடம்மாறி ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் காணியை துப்புரவு செய்யும் போது சப்பாத்து அணியும் socks ல் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் குறித்த தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.