தம்பதியினரை மிரட்டி கார், பணம், தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல்
தம்பதியினரை மிரட்டி கார், பணம் மற்றும் தங்க நகைகளைத் கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (16) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை, காரில் பிரவேசித்த மூன்று பேர் மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
பின்னர் இது குறித்து திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் தெரிவக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று மாலை கிண்ணியா பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலையைச் சேர்ந்த 34 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட கார், திருட்டிற்காக பயன்படுத்திய கார் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரையும் கைது செய்வதற்காக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.