சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் ; மகிழ்ச்சி பெறுபவர்கள் யார் தெரியுமா?
அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் பிப்ரவரி மாதத்தில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பிப்ரவரி 11 ஆம் திகதி நிகழவுள்ளது. ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசைகள் வெற்றிகரமாக நடக்கும். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் எதிர்பாராத அளவில் லாபம் குவியும்.

மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். நிதி நிலைமை மேம்படும். தனிப்பட்ட முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். ரிஸ்க் மூலம் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக லாபத்தால் பணம் குவியும்.

துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். படைப்பு துறயில் இருப்பவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
