விஜித ஹேரத்தின் செயலாளரால் பெண்களுக்கு துன்புறுத்தல்
இலங்கை வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தனிப்பட்ட செயலாளர் பெண்களுக்கு துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
கடந்த 15ம் திகதி நாடாளுமன்றத்தில் தயாசிரி ஜயசேகர கூறுகையில்,
எதுவுமே தெரியாத நபர்களை சேவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
மோசமில்லா அமைச்சரான விஜித ஹேரத், மோசமான ஒரு தனிப்பட்ட செயலாளரை நியமித்து வெளிநாட்டு அமைச்சகத்தில் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார் என உறுப்பினர் தயாசிரி கூறினார்.
இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் ஒழுக்கமான நடத்தை கொண்ட உயர்தர இராஜதந்திரிகளை நியமிப்பதாக தமது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஆட்சிக்கு வந்ததும் தமது கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமது அரசியல் மேடைப் பேச்சாளராக பணியாற்றிய வெளிநாட்டு சேவை பற்றி எதுவுமே தெரியாத நபர்களை அந்த சேவைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு சேவைக்கு தொழில்முறை நிபுணத்துவம், ஒழுக்கமான நடத்தை, மிக உயர்ந்த தரநிலைகள் மற்றும் இராஜதந்திர விவேகம் கொண்ட தகுதியான அதிகாரிகளை நியமித்தல்,
அதே போல் இலங்கை தூதரகங்களின் தலைமைகளாக நிரூபிக்கப்பட்ட சாதனைகள் கொண்ட தொழில்முறை இராஜதந்திரிகளை நியமித்தல் இதுதான் ஒரு வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கை அறிக்கையில் வெளிநாட்டு அமைச்சகம் தொடர்பாக இருந்தது என்றும் இது இப்போது இருக்கிறதா? எனவும் தயாசிரி ஜயசேகர நாடாளும்ன்றில் கேள்வி எழுப்பினார்.