முற்றாக மூடப்பட்ட ரயில் கடவைகள்! ரயில்வே திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
கம்பஹா - ஜாஎல பிரதான ரயில் மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள ரயில் கடவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் கடவை திருத்தப்பணிகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த ரயில் கடவை எதிர்வரும் 28ஆம் திகதி காலை 8 மணி முதல் 29ஆம் திகதி மாலை 6 மணி வரை முற்றாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்பஹா - ஜாஎல பிரதான ரயில் மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள ரயில் கடவை எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இலங்கை ரயில்வே திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.