நீதிமன்ற வளாகத்தில் அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பியோடிய கைதி!
கல்கமுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
முச்சக்கர வண்டியை கடத்திய சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரும் அவரது மனைவியும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கல்கமுவ நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக இன்று (28) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக, வாரியபொல சிறைச்சாலையில் இருந்து இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும், பஸ்ஸில் இருந்து இறங்கி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் வேளையில் சந்தேக நபர் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பியோடிய விளக்கமறியல் கைதியை தேடி கல்கமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.