வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத கஜேந்திரர்கள்!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் 8 ஆவது ஜனாதிபதை தெரிவுக்காக நாடாலுமன்றில் இன்று இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
ஜனாதிபதி பதவிக்காக , பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து 7 ஆவது ஜனாதிபதியான கோட்டாபய பதவி விலகியதை அடுத்து ரணில் பதி ஜனாதிபதியாக பொருறுப்பேற்றுள்ள நிலையில் நாட்டின் 8 ஆவது ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.