எரிபொருள் பிரச்சனை ; பெட்ரோலிய அமைச்சர் மௌனம்
இலங்கையில் பெட்ரோலிய விநியோகஸ்தர்களுக்கும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இது தொடர்பாக அரசாங்க தரப்பில் பலமுறை தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தப்பட்டாலும், எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இது தொடர்பாக குறிப்பிடத்தக்க கருத்துக்களை தெரிவிக்கவில்லை.
அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை
எனினும் இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் மௌனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை குறித்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் பெரும்பாலும் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் தொடர்புடைய துறையைச் சாராத சில அமைச்சர்களும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
எனினும் , இதுவரை துறை அமைச்சர் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .