மனைவியின் நண்பர்களால் பிரான்ஸ் வாழ் தமிழ் குடும்பத்தில் களேபரம்; இலங்கை வந்த கணவன் அதிரடி!
கணவனின் சொல்லை மீறி பாடசாலை நண்பர்களுடன் தொடர்பை பேணிய மனைவியை இலங்கைக்கு கூட்டிவந்து தாக்குதல் நடத்திவிட்டு, கணவர் - மனைவியின் கடவுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு பிரன்ஸிற்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும், கணவன் முல்லைத்தீவை பின்புலமாக கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.

பெண்ணின் பாஸ்போர்ட் , நகைகளுடன் பிரான்ஸ் பறந்த கணவன்
இவர்கள் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், மனைவியின் பாடசாலை நட்புகளால் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
பாடசாலை நண்பர்களின் நட்பை துண்டிக்குமாறு கணவன் வற்புறுத்தியும் , மனைவி அதனை காதில் வாங்காது நட்பை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் மனைவியின் தாயாருக்கு 50 ஆவது பிறந்தாளை சர்ப்பிரைஸாக கொண்டாடலாம் என கூறி மனைவியுடன் இலங்கைக்கு வருகை தந்த கணவன் , கொழும்பில் வீடு ஒன்றை எடுத்து தங்கியுள்ளார்.

இதன்போது மனைவியின் பாடசாலை நண்பர்கள் விவகாரம் மீண்டும் சச்சரவை ஏற்படுத்திய நிலையில், கணவன் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கியதாக கூறப்படுகின்றது.
ஒருபக்கம் போராடும் தையிட்டி மக்கள்; மறுபக்கம் Nolimit இல் குவிந்த கூட்டம்; யாழின் இன்றைய பரிதாப நிலை!
அதோடு மனைவியை வீட்டிற்குள் கட்டிவைத்ததோடு, பெண்ணின் பாஸ்போர்டையும், அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் எடுத்துகொண்டு பிரான்ஸ் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
பெண்ணின் சத்தம் வந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது பெண்னை கண்டு அதிர்ச்சியடைந்து , உடனடியாக பெண்னை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.