ஹோர்முஸ் நீரிணையை மீட்க பிரான்ஸ் அதிரடி நடவடிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒரு "முன்னோடியில்லாத" இராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.
சர்வதேச எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பிரான்ஸ் தனது கடற்படையின் ஒரு பெரும் பகுதியை மத்திய கிழக்கு கடற்பரப்பில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.

இது ஒரு தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கை என பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்த போரை அடுத்து ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முடக்கியுள்ளதுடன், அதனூடாக செல்லும் கப்பலகள மீது தாக்குதல் நடத்தப்பட்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக கப்பல் போக்குவரத்துக்கள் ஸ்தமிப்தம் அடைந்துள்ளதால உலக நாடுகளில் எரிபொருளுக்கு தட்டுபாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.