ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான் ; மொஜ்தபா கமேனி வெளியீட்டுள்ள முதல் அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை நேற்று (12) வெளியிடப்பட்டது.
அவரின் உரையை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும், அவர் நேரடியாக பொதுமக்கள் முன் தோன்றாததும், குரல் பதிவு வெளியிடப்படாததும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், அறிக்கையை மற்றொருவர் வாசித்ததாக கூறப்படுவதால், அவர் பொதுவெளியில் தோன்றாததைக் குறித்து சில சந்தேகங்களும் எழுந்துள்ளன.

அறிக்கையில், அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடவடிக்கைகள் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் எந்த நிலையிலும் பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மறைந்த தந்தையான அலி கமேனி மற்றும் போரில் உயிரிழந்த குடிமக்களின் நினைவாக எதிரிகளிடம் பழிவாங்குவோம் எனவும், ஈரான் இழப்பீட்டை கோரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மறுக்கப்பட்டால், எதிரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதோ அல்லது அதே அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதோ நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், அது வழக்கமான சமாதானம் அல்லது தூதரக அணுகுமுறைகளை விட கடுமையான அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக மதிப்பிடப்படுகின்றது.
இந்தி விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்......