பிரெஞ்சுப் பாணுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!
சிறீமாவின் ஆட்சிக்காலத்தில் பாணுக்காக வரிசையாக காத்திருந்தோம் என்று 70 இல் வாழ்ந்தவர்கள் அடிக்கடி சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.
இதுவும் பாணுக்கான வரிசைதான். இது அதே போல் பசிக்கானது அல்ல ருசிக்கானது என நபர் ஒருவர் குறித்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தது,
எங்கள் வீட்டுக்கு அருகே பிரான்சுக்குள் உள்ள வெதுப்பகம் ஒன்று. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குதான் காலை உணவுக்கான பாண் வகைகளை வாங்குவோம். சுடச் சுட சுவை மிகுந்த பலவகையான பிரெஞ்சுப் பாண்கள் இங்கு கிடைக்கும்.

ஆனால் என்ன இப்படியான வரிசையில் காத்திருந்துதான் வாங்க வேண்டும். உள் நுழைவதற்குள் பாண் வெதும்பும் வாசனையில் அடி வயிறு வரை அமிலம் சுரக்கத் தொடங்கிவிடும்.
நிறைவாக உள் நுழைந்து பிடித்த பாணை வாங்கி வெளியே வரும்போதே மூலையால் ஒரு துண்டை பிய்த்து வாயில் போட அன்றைய நாளும் அந்த நொடியும் மோட்சம் பெறும். என Inuvaijur Mayuran என்ற நபர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.