யாழில் வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது அவர்களிடமிருந்து ஒரு வாள், 860 போதை மாத்திரைகள், 4 கைபேசிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் வன்முறைச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.