போதைப்பொருள் வெறி ; தந்தையின் செயலால் 14 வயது மகளுக்கு நேர்ந்த கதி
அம்பாறை காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியில், போதைப்பொருள் வாங்குவதற்காக பணம் தேவைப்பட்டதால் 14 வயது மகளிடம் இருந்த தங்க வளையலை வழங்குமாறு தந்தை தாக்கிய சம்பவத்தில் சிறுமி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள்
போதைப்பொருள் வாங்குவதற்கான பணத்தைத் திரட்டுவதற்காக, சிறுமியின் கையில் இருந்த 3 பவுண் நிறை கொண்ட தங்க வளையலை கழற்றி தருமாறு தந்தை கேட்டதாக கூறப்படுகிறது.
அதனை மகள் வழங்கிய பின்னரும், தந்தை அவரை அடித்து தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாருடன் குறித்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி, தந்தைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பொலிஸாரிடம் கோரியதையடுத்து, கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் எச்சரித்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.