கிழக்கில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நான்கு பேருக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை கோணேஸ்வரம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடந்த (18.09.2023) அன்றைய தினம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கைக்கு சொந்தமான கடற்கரை மற்றும் கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு கடற்படை எப்போதும் விழிப்புடன் இருப்பதுடன் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை கடற்படை கப்பல்துறையினரால் திருகோணமலை கோணேஸ்வரம் பகுதியில் அனுமதியற்ற மீன்பிடி உபகரணங்களுடன் மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நடவடிக்கையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய 01 டிங்கி படகு மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 47 வயதுக்குட்பட்ட திருகோணமலையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட் பே மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கிடையில், டிங்கி மற்றும் மீன்பிடி சாதனங்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.