யாழில் நால்வர் செய்த சட்டவிரோத செயற்பாடு ; அதிகாலையில் அதிரடி காட்டிய பொலிஸார்
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Vironika
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை ‘வெற்றிலைக்கேணி’ கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நான்கு சிறு படகுகளில் சட்டவிரோத விளக்குகள் மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US