வீடுதேடிச்சென்ற பொலிஸ்; முன்னாள் அமைச்சர் தலைதெறிக்க ஓட்டம்!
இலங்கை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய அவரது வீட்டிற்கு பொலிஸ் அதிகாரிகள் குழு சென்றபோது, அவர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆவணங்கள் தயாரித்து விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரசன்ன ரணவீரவை கைதுசெய்ய பொலிஸார் சென்றனர்.
மொபைல் போனை அணைத்துவிட்டு தலைமறைவு
முன்னாள் இரசாங்க அமைச்சர் தற்போது தனது மொபைல் போனை அணைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது மனைவி மற்றும் ஓட்டுநரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதேவேளை இந்த விசாரணைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, கெலனியா பிரதேச சபையின் முன்னாள் பிரதி தலைவர் உட்பட மூவர் , 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.