இலங்கை வந்துள்ள வெலிநாட்டு சுற்றுலா பயணிகளின் சட்டவிரோத செயல் அம்பலம்!
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரஜைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகம் நேற்று (07-03-2024) வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு அண்மைக் காலமாக அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதுடன், சட்டவிரோதமான முறையில் நாட்டில் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி அறிய தென் மாகாணத்தில் ஊடகம் ஒன்று ஆய்வில் ஈடுபட்டிருந்தது.
சமூக ஊடக கணக்குகள் மூலம் பல்வேறு குழுக்களை உருவாக்குவதன் மூலம் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரஜைகள் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தென் மாகாணத்தின் சுற்றுலா மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் மேலும் பல சான்றுகள் வசமாக சிக்கியுள்ளன.
இலங்கைக்கு வந்த சுற்றுலா தம்பதியரை நாட்டிற்கு வருகை தந்த மற்றுறொரு வெளிநாட்டவர் சுற்றுலா வழிகாட்டி இடமொன்றுக்கு அழைத்துச் செல்வதும் கண்டறியப்பட்டது.
அதேபோல், மற்றொரு வெளிநாட்டவர் வேறொரு வெளிநாட்டு சுற்றுலாப்பயணியின் வெளிநாட்டு பணத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு இலங்கை ரூபாயை கொடுப்பதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டவர்களுக்கும் உள்நாட்டு சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர்.
பொறுப்புள்ள அரசு அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்குமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.