இலங்கை கடற்பரப்பில் ஆபத்தான பெரும் தொகை பொருட்களுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்!
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 250 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கப்பலில் இருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் 9 பாரிய பொதிகளில் 225 சிறிய பொதிகளாக 250 கிலோ கிராம் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
கடற்படைக்கு கிடைத்த இரகசிய புலனாய்வு தகவலுக்கு அமைய, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுடன் இணைந்து இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 900 கடல் மைல்கள் (சுமார் 1665 கிலோமீற்றர்) தென் கடற்பரப்பில் குறித்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைதான , சந்தேகநபர்களுக்கு எதிரான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.