வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரக முகாமையாளர் கைது ; விசாரணையில் வெளிவந்த தகவல்
ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ருபாவை மோசடி செய்ததாக கூறப்படும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இன்று மாலை நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தில் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ருமேனியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 2023 ஆம் ஆண்டு முதல் பல சந்தர்ப்பங்களில் தன்னை ஏமாற்றி சந்தேக நபர் பணம் பெற்றதாக, பண்டாரவளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடளித்துள்ளார்.
அதன்படி, பணியகம் விசாரணைகளைத் தொடங்கியதுடன் அதனூடாக வெளிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.