விமானத்தின் கருப்புப்பெட்டி குறித்து பிரபல வானொளியாளர் வெளியிட்ட தகவல்!
காலநிலை மாற்றத்தினால் இந்த பூமி ஒருநாள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே பூமியின் அழிவை பதிவுசெய்ய ஒரு கறுப்புப்பெட்டியை ஆஸ்திரேலியாவில் நிறுவ அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தை பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் விளக்குகிறார்.
விமானத்தில் கருப்புப்பெட்டி ஒன்று இருப்பது அனைவருக்கும் தெரியந்த ஒன்று. ஆனால் இதனை கருப்புப்பெட்டி என்று அழைத்தாலும் அதன் நிறம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விமானம் விபத்துக்குள்ளாகும் போது இந்த பெட்டி கடலில், காட்டில் அல்லது பள்ளத்தாக்குகளில் விழுந்து விட்டகூடும். அதனை எளிதில் கண்டுபிடிக்கப்படி கூடிய வகையில் அவை ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்படுகின்றன. இதனை 1954 உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவுஸ்திரேலியரான டேவிட் வாரன்.
இதனை சாதரணமாக விமான பதிவு என சொல்வதும் உண்டு. விமானத்தில் இருக்கும் கருப்புப்பெட்டி ஒரு மின்னனு பதிவு கருவி (electronic recording device) விமான விபத்துக்கள், விமான சமந்தப்பட்ட பாரதுராமான சம்பவங்கள் நிகழும் போது கருப்புப்பெட்டிகளில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து ஆராய்ந்து விபத்து அல்லது சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணத்தை தீர்மானிக்க முடியும் என இரா.சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தீர்மானங்களை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்க்க முடியும். விமானம் பறக்கும் போது பெறப்படும் தரவுகள், உயரம், எரிபொருள், வேகம், வானியல் சூழல் என்பவை மற்றும் விமானிகளின் இருக்கைகள், மற்றும் கருவிகள், கட்டுப்பாட்டு அறையில் பாதிவாகும் விமானிகளின் உரையாடல் என்பனவும் இந்த பெட்டியில் பதிவாகும்.
ஒவ்வொரு விமானத்தில் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கவேண்டும் என்பது காட்டயமாகும். இந்த பெட்டிகள் மிகவும் உறுதியான இருப்புகளால் வடிவமைக்கப்படுகின்றது. விமானத்தில் பாதிப்பு குறைவாக ஏற்பட கூடிய வால் பகுதியில் இந்த கருப்பு பெட்டி வைக்கப்பட்டிருக்கும்.
மணிக்கு 780 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று காங்ரெட் சுவற்றில் மோதினாலே, அல்லது இரண்டரை டன் எடை கொண்ட பொருள் ஒன்றை இதன்மீது ஏற்றினாலே அல்லது 1,100 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்திற்கு உட்பட்டாலே அல்லது 6,000 மீட்டர் ஆழமான கடல் பரப்பில் வீழ்ந்தால் கூட இந்த பெட்டிகள் பாதிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கருப்புப்பெட்டி கடலில் வீழ்ந்தால் அதில் இருந்து வெளியேறும் சிக்னல் 1.5 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என அவர் கூறியுள்ளார். இப்படியான கருப்புப்பெட்டி ஒன்று நாம் வாழும் பூமியில் தேவை என்று விஞ்ஞானிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.