4 ஆண்டுகளின் பின்னர் கைதான ஐவர்
வனப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்து மயில் ஒன்றை வேட்டையாடி உட்கொண்ட காணொளியில் தோன்றிய பழங்குடியினர் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதுருஒய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மயிலை வேட்டையாடி உண்ட காணொளி
வெளிநாட்டவர் ஒருவருக்கு சொந்தமான யூரியுப் தளத்தில் 2020ஆம் ஆண்டு மாதுருஒய – தெஹிஅத்த எல பகுதியில், ஈட்டியைப் பயன்படுத்தி மயில் ஒன்றை வேட்டையாடி உண்ட காணொளி வெளியிடப்பட்டது.
பழங்குடியை சேர்ந்த ஒருவரினால் மயில் வேட்டையாடப்படுவதாகவும் அதனைப் பலர் உட்கொள்ளும் வகையிலும் காணொளி வெளியிடப்பட்டிருந்தது.
காணொளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த ஐவரும் சரணடைந்த நிலையில் கைதாகினர்.