400 பில்லியன் டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபர்
400 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்லா பங்குகளின் உயர்வு
ஸ்பேஸ் எக்ஸின் சமீபத்திய இன்சைடர் பங்கு விற்பனை மற்றும் டெஸ்லா பங்குகளின் உயர்வு காரணமாக எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், ஸ்பேஸ் எக்ஸ்-ன் மொத்த மதிப்பீடு தோராயமாக 350 பில்லியன் டாலர்கள் ஆக உள்ளது. இந்த மதிப்பீடு உலகின் மிகவும் மதிப்புமிக்க தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் இன் நிலையை வலுப்படுத்துகிறது.
மேலும், அவரது சொத்து மதிப்பை செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ் ஏஐ- யும் அதன் மதிப்பீட்டை அதிகரித்துள்ளது. உலக வரலாற்றில் யாரும் தொட்டிராத சொத்து மதிப்பை கடந்த மாத இறுதியில் எலான் மஸ்க் தொட்டு இருந்தார்.
ரூ.29 லட்சம் கோடியாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.