இனி இதற்கும் QR குறியீடு முறைமை ; எதிர்கட்சி தலைவர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படும் அச்சம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேகாலை தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார்.

QR குறியீடு
தரமற்ற மருந்துகளும் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு போகும் போக்கைப் பார்த்தால், விவசாயிகளின் உரங்களுக்கும் QR குறியீடு வைக்கப்படுமோ என்று அச்சம் காணப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தின் ஒழுங்கற்ற, திறனற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தியது உண்மையை உணர்த்துவதற்காகவே என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.