டிசம்பர் மாதம் பேரழிவு ; இலங்கைத்தீவே இல்லாமல்போகுமா? பகீர் கிளப்பிய நடிகர் அனுமோகன்
2024 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மிகப்பெரிய இயற்கை சீற்றம் வரப்போகிறதாகவும் அதில் இலங்கைத் தீவு காணாமல் போய்விடும் எனவும், தமிழ் சினிமாவின் பிரபல டைரக்டரும், நடிகருமான அனுமோகன் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் , கடந்த வாரம் பெய்த புயல் மழை காரணமாக, திருவண்ணாமலையில் நிலச்சரிவுக்கு காரணம், சிவனின் கோபமே என ஆன்மீகவாதிகள் கூறி வருகின்றனர்.
பஞ்சபூதங்களின் சீற்றம்
இந்நிலையில் சித்தர்கள் எழுதிவைத்ததை, நான் 45 வருடத்துக்கு முன்பு படித்தேன்.. இதற்கு பிறகு சித்தர்கள் என்னுடைய கனவில் தோன்றி அதனை கூறியதாகவும் அனுமோஹன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
மனிதநேயம் மங்கி, மனிதன் சுயநலவாதிகளாக மாறும்போது, மனிதனுக்கு நீர், நிலம் நெருப்பு, காற்று, ஆகாயம் என்று பஞ்சபூதங்கள் ஒன்றுசேர்ந்து அறிவுரை வழங்குமாம்.
இதைத்தான் சித்தர்கள் அந்த காலத்திலேயே சொல்லியிருக்காங்க.. கடல் பொங்கும்.. பூமி பிளக்கும், வானத்தில் எரிநட்சத்திரம் விழும்.. சூறைக்காற்று 500, 1000 கிமீ. தூரத்திலிருந்து அடிக்கும்.
இவையாவும் இந்த ஆண்டிலேயே நிச்சயம் நடக்கும்.. அந்த காலத்தில் சித்தர்கள் சொன்ன வாக்குகள், ஒவ்வொன்றாக தற்போது பலித்து கொண்டுதான் இருக்கிறது. நிலச்சரிவு என்பது இந்த வருடமே நடக்கும்.
முக்கடல் பொங்கும் - இலங்கைத்தீவே கடலில் மூழ்கும்
தென்னிந்தியாவில் முக்கடல் பொங்கும். அதாவது அரபிக்கடல், வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம் மூன்று கடலுமே ஒன்றாக பொங்கும். கடலுக்கு கீழே எரிமலை வெடிக்குமாம். அது சுனாமியாக வரும் அப்போது ராவண பூமி அதாவது இலங்கைதீவே கடலில் மூழ்கும் என்று சித்தர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி, எல்லாமே நடக்கும். மனிதன் இதை சந்தித்தே ஆகணும். அதனால் எப்போதும் அரசாங்கத்தை குறை சொல்லியோ, அடுத்தவரை குறை சொல்லியோ பிரயோஜனமில்லை. இயற்கைக்குண்டான மரியாதையை மனிதன் தந்தே ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதே போல சித்தர் ஒருவரும் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து கூறுகையில்,
"திருவண்ணாமலையில், இன்று வரையில் நிலச்சரிவு என்பது ஏற்பட்டதில்லை ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நிலைத்து நிற்கும் திருவண்ணாமலையில் ஏற்பட்டுள்ள இந்த அழிவு, சிவனின் கோபத்தையே உணர்த்துகிறது.
அண்ணாமலையின் நெந்றிக்கண்ணை திறந்த பிறகாவது நாம் அனைவரும் விழிக்க வேண்டும். இல்லாவிட்டால், இதற்கு பிறகு மிகப்பெரிய பேரழிவு காத்திருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.