அவிசாவளையில் தீக்கிரையான வீடுகள்!
அவிசாவளை – பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் நேற்று (01.12.2023) முற்பகல் ஏற்பட்ட பரவிய தீயினால் 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த லயன் குடியிருப்பிலிருந்த 4 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தீ விபத்தினால், 8 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், குறித்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள்
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், தமது நிபுணர் குழு சம்பவம் குறித்து அறிக்கை சமர்பித்ததன் பின்னர் வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.