காணாமல்போனோர் விவகாரம்; ஆயிரம் நாட்களுக்குள் இறுதித்தீர்வு; சுரேன் ராகவன்
காணாமல்போனோர் பற்றிய விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 1,000 நாட்களுக்குள் இறுதித்தீர்வொன்றை எட்டமுடியும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் வடமாகாண ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார்.
இக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்கும் அதேவேளை, மன்னிப்புக்கோரவேண்டிய இடங்களில் அதனையும் செய்வதுடன் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தக்கூடியவகையில் அரசியல் மற்றும் சமூக ரீதியிலான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த நேற்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் இணையவழிக்கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிந்தத கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.