தலை குனியாத பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியலில்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், பெண் சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்க புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண் சட்டத்தரணி மீது புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கு தொடர்ந்துள்ள நிலையிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமல் நுழைந்த சட்டத்தரணி
முன்னதாக மார்ச் 7 ஆம் திகதியன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கான பிணை விசாரணைக்காக, குறித்த பெண் சட்டத்தரணி முன்னிலையானபோது, நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமல் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமல் நுழைந்தமை நீதிமன்ற அவமதிப்பதாகும், இது மரியாதை காட்டாததற்கு சமம் என்று அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட பெண் சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவருக்காக பிணைக் கோரிய போதும், நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.