தமிழர் பகுதியொன்றில் நீதிமன்றுக்குள் இரு பிள்ளைகளின் தந்தை செய்த விபரீத செயல் ; கழிப்பறைக்குள் சம்பவம்
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் நேற்று (26) இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 21ஆம் திகதி 2400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறை கழிப்பறைக்குள் தற்கொலை
இந்நிலையில், குறித்த நபர் இன்று விசாரணைக்காக சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, திறந்த நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டார்.
திறந்த நீதிமன்ற நடவடிக்கையானது பதில் நீதவான் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்போது, குறித்த நபர் சிறை கழிப்பறைக்குச் சென்று அங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மேல் இரண்டு திருட்டு மற்றும் நான்கு போதைப்பொருள் வழக்குகள் பதிவாகியுள்ளன.