புற்று நோயால் உயிரிழந்த தந்தை ; வைத்தியர்களுக்கு கொலை மிரட்டல்
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், கோபமடைந்து வைத்தியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்திய மூன்று மகன்கள் உட்பட ஐந்து பேரை பிணையில் விடுதலை செய்ய களுத்துறை பிரதான நீதவான் மகேஷ் வாகிஷ்ட உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மூன்று மகன்கள் உட்பட ஐந்து பேரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு களுத்துறை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை ஒருவர் செப்டெம்பர் 19 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்த தந்தையின் மூன்று மகன்களும் உறவினர்கள் இருவரும் கோபமடைந்து வைத்தியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.