இலங்கையை உலுக்கிய சம்பவம்; தந்தை, மகள், மகன் உயிரிழப்பு
மாத்தறை மித்தெனிய பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தந்தையும், 6 வயது மகளும் உயிரிழந்த நிலையில் , சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அவர் உயிரிழந்தார்.
அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு
மித்தெனிய, கடேவத்த சந்தி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து, அவர் நபர் இடத்திலேயே இறந்தார், அவரது மகனும் மகளும் காயமடைந்தனர்.
தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்த நிலையில், தற்போது மகனும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.