19 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு தந்தை நடத்திய பெரும் கொடூரம் ; அதிர்ச்சி கொடுத்த காரணம்
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில், குடும்ப எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்ட 19 வயது கர்ப்பிணி பெண் மான்யா பாட்டீல், அவரது தந்தையாலேயே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் திருமணத்திற்கு பிறகு உயிருக்கு அஞ்சி வெளியூரில் வசித்து வந்த தம்பதியினர், ஊருக்கு திரும்பியுள்ளனர்.

தப்பியோட்டம்
அடுத்த நாள் மாலை, இரும்பு கம்பிகளுடன் மான்யாவின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை தாக்கியது.
இதனை தடுக்க முயன்ற அவரது மாமனார் மற்றும் மாமியாரும் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த மான்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மாணவியிடம் ஆபாச பேச்சு ; ”வளர்ப்பு சரியில்லை” மாணவர்களின் தாய்மார்களுக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
இந்த கௌரவ கொலை தொடர்பாக மான்யாவின் தந்தை பிரகாஷ் மற்றும் இரு உறவினர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை பிடிக்கத் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.