தமிழர் பகுதியில் சம்பவம் ; 35 வருடங்களின் பின் வீட்டிற்கு வந்த தந்தை மகனுக்கு அரங்கேற்ற காத்திருந்த கொடூரம்
புத்தளம் மாவட்டம், ஆரச்சிகட்டுவ பகுதியில் தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையில் துப்பாக்கியுடன் நபரொருவர் நடமாடுவதாக ஆரச்சிகட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிர விசாரணை
சந்தேக நபர் 35 வருடங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அவர் வீட்டை விட்டு வெளியேறும்போது அவரது மகனுக்கு நான்கு வயது என கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த துப்பாக்கி உள்ளூரில் தயாரிக்கப்பட்டது எனவும் 15 வருடங்களுக்கு முன்பு ஆரச்சிட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரால் துப்பாக்கி தனக்கு கிடைத்ததாகவும் பொலிஸாரிடம் சந்தேக நபர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், துப்பாக்கியும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.