கனடா இடம்பெற்ற வீதி விபத்து ; யாழை சேர்ந்த தந்தையும் மகளும் பலி
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக தற்போது கனடாவில் வசித்த 40 வயதான தந்தையும் அவரது 03 வயது மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த வேளை , அவர்களது வாகனம் விபத்துக்கு உள்ளானதை அடுத்து, காயமடைந்த தனது மகளை விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்து மீட்டு ,
அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்ட வேளை மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவத்துடன் மூன்று வாகனங்கள் தொடர்புடையதாகவும் , விபத்து தொடர்பில் கனேடியன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.