யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; மேலதிக தகவல் வெளியானது
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் - பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இருவர் உயிரிழந்த வாகன விபத்தில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தையும், 9 வயதுடைய அவரது மகனுமே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை
நேற்று (13) இரவு கனகம்புள்ளியடி சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக பயணித்த கே.டி.எச். வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியந்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
தனக்கு சாதகமாக தீர்ப்பு கேட்டு முதியவர் செய்த விபரீதம் ; மட்டக்களப்பில் அதிகாலையில் அரங்கேறிய சம்பவம்
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாரிடம் சாரதியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.