கெஹெல்பத்தரவால் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு நேர்ந்த கதி
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே இந்தச் சந்தேகநபரான சட்டத்தரணிக்கு லட்சக்கணக்கான பணத்தை கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீவிர விசாரணை
இதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சட்டத்தரணியின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சந்தேகநபரான சட்டத்தரணி கடந்த ஜூன் மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் வழியாக துபாய் சென்று திரும்பியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் அவ்வப்போது வாடகைக்கு வீடுகளைப் பெற்று தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        