இலங்கையில் அடர்ந்த காடுக்குள் 3 பச்சிளம் குழந்தைகளுடன் வாழும் குடும்பம்!
அனுராதபுரம் மாவட்டம் ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பம் தங்கள் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக தாங்கிக் கொள்ளும் சக்தியின்றி உள்ளனர்.
குடிசை ஒன்றிலேயே அவர்கள் வாழ்ந்து வரும் நிலையில் மழை காலங்களில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த சிறிய வீட்டில் குடிநீர் வசதியோ, மின்சார வசதியோ இல்லை. இந்த சிறிய வீடு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் பாதுகாப்பு கருதி இரவில் மரத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்த குழந்தைகளின் தந்தை மரத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் இருந்து விழுந்து தற்போது ஊனமுற்றுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை செய்து தருவதற்கான வசதிகள் தம்மிடம் இல்லை என குழந்தைகளின் பெற்றோர் கூறுகின்றனர்.