மசாஜ் நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
கொழும்பிலுள்ள உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் அவுஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு டி சில்வா முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபரை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியப் பெண், சுற்றுலாத்துறை காவல்துறையிடம் முறைப்பாடு செய்திருந்ததாக பம்பலப்பிட்டி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த உடற்பிடிப்பு நிலையம், ஒரு வெளிநாட்டுப் பிரஜையின் அனுசரணையில் நடத்தப்பட்டு வருவதாக பம்பலப்பிட்டி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர்.