யாழில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (29-03-2024) இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்து வசந்தபுரம் பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அவர் குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.