மூன்று பிள்ளைகளின் தந்தை எடுத்த தவறான முடிவால் நேர்ந்த சோக சம்பவம்!
நுவரெலியா மாவட்டம் - மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட பால் காமம் பிரிவில் 58 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் பழனி வேல் என்பவர் தனது இல்லத்தில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (15-12-2022) மதியம் 1. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஆனந்த பத்மசிறீ சம்பவ இடத்துக்கு சென்று பார்த்துள்ளார்.
இதன்போது உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஆனந்த பத்மசிறீ மேலதிக விசாரணை நடத்தி வருகின்றார்.