அதிவிசேட வர்த்தமானி; மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவிப்பு வரை உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து, ஜனாதிபதியால் 21 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவை
1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் உறுப்புரிமையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் படி அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையெழுத்திடப்பட்டு வெளியிடப்பட்டது.
சாதாரண பொது வாழ்க்கையைப் பேணுவதற்கு அவசியம் என்பதையும், அந்த சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, மின்சார சபைத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களுக்கு ஜனாதிபதி அனுர அரசின் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.