யாழில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! சாரதி அதிரடி கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறித்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (15-12-2024) இளவாலை, பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெரியவிளான், பற்றிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் தந்தையும், மகனும் நின்றுக்கொண்டிருந்த வேளை தனியார் பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு சென்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதான மோ.பாக்கியநாதன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், இளவாலை பொலிஸார் அவரை இன்று கைது செய்தனர்.
குடும்பஸ்தரின் மரணம் குறித்தான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.