பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 10 வயது சிறுமி கொலை... தப்பியோடிய சந்தேக நபருக்கு நேர்ந்த கதி!
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15 ஆம் திகதி 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற குறித்த நபர் நேற்று (15) திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (16-12-2024) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் இன்றைய தினம் காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.