கொழும்பில் வசிக்கும் நபரொருவருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை!
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த சம்பவத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட சந்தேக ந்பருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
நீண்ட கால விசாரணையின் பின்னர், கொழும்பு 12, மிரானியா வீதியில் வசிக்கும் எம்.எப்.எம். ஃபர்ஸான் என்ற நபருக்கே இவ்வாறு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் 10 திகதி பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு 5,716 சட்டவிரோத போதைப் பொருட்களைக் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.