சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு
நாட்டின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் 49 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைய இந்த பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த பொதுமன்னிப்பு பின்வரும் அடிப்படையில் அமையவுள்ளது.

சிறு குற்றங்களுக்கு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் அவர்களது தண்டனை காலம் குறைக்கப்படும்.
அத்துடன், 75 ஆயிரம் ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலம் முழுமையாக இரத்து செய்யப்படவுள்ளது.
அதற்கமைய, இந்த விசேட பொதுமன்னிப்பின் கீழ், தகுதியுள்ள கைதிகள் சுதந்திர தினமான நாளை (4) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.