வவுனியாவில் முதன்முறை... 1200 பேருக்கு இடம்பெறும் சத்திர சிகிச்சை!
வவுனியா வரலாற்றில் முதன்முறையாக வவுனியா பொது வைத்தியசாலையில் 1200பேருக்கான கண் சத்திர சிகிச்சை தொடர்ந்து ஒரு வாரமாக இடம்பெற்று வருகிறது.
இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து பிரித்தானியாவை சேர்ந்த புனர்வாழ்வும் புதுவாழ்வும் என்ற அமைப்பினர் இதனை நடாத்தி வருகின்றனர்.
இதற்கான நிதி பங்களிப்பை மலேசியாவை சேர்ந்த அலகா மற்றும் ஆனந்தா நிதியம் அமைப்பு இலங்கை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் வவுனியாவை சேர்ந்த 700 நோயாளர்கள், அநுராதபுரத்தை சேர்ந்த 150 நோயாளர்கள், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 200 நோயாளர்கள், மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 200 நோயாளர்களும் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
குறித்த சத்திர சிகிச்சைகளுக்காக 6 பேர் கொண்ட கண் சிகிச்சை நிபுணர்கள் குழு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர், என்பதுடன் இதில் 3 பேர் இந்தியாவை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றினை இந்த துனை தூதவர் அவர்கள் வவுனியாவில் நடாத்தியிருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
இந்த சிகிச்சையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுவதுடன் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பயனாளிகளை அழைத்து வருவதற்கும் வாகன ஒழுங்குகளும் முற்றிலும் இலவசமாகவே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டை செய்வதற்கு வைத்திய நிபுனர் சர்வேஸ்வரன் அவர்களின் முயற்சியே காரணம் எனவும் அவருக்கும் அவரது குழாமிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ற மூன்று கண் வைத்திய நிபுனர்களுக்கும் நன்றிகளை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இந்த செயல்படானது எதிர்காலங்களில் இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் நடாத்துவதக்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக இந்திய துனை தூதரகம் என்றும் ஆதரவு வழங்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.