யாழில் 400 இற்கும் மேற்பட்டோருக்கு கண்பிரச்சனை; மின்குமிழ் பற்ற வைத்தவருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் பண்டதரிப்பு பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளியுடனான மின்குமிழ்களால் 400 க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிக ஒளியை ஏற்படுத்திய மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் அவர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அதிகளவான ஒளிப்பாவனையால் கண்கள் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.