எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் வழக்கு ; தீர்ப்பை பகுப்பாய்வு செய்யும் விரிவான கடிதம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பகுப்பாய்வு செய்யும் விரிவான கடிதம் ஒன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
361 பக்க தீர்ப்பை ஆய்வு செய்த பின்னர், சட்டமா அதிபர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை வசூலிப்பதற்கான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறிப்பாக, உயர் நீதிமன்ற தீர்ப்பில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக இந்த கப்பல் விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்திற்கு ஒரு வருடத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் அதனைக் கப்பல் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.